வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 2155 முறைப்பாடுகள்

Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக ஹாலிஎல, இரத்தினபுரி, தங்காலை, குருணாகல் மற்றும் கண்டி அலுவலகங்களிலும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

11 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் 65 சந்தேகநபர்களும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...