மைத்திரிக்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக  மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கை ஒரு தலை பட்சமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு  மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இந்த வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத் சந்திரவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.

இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன, கடந்த மே 12 அன்று  சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...