இலங்கையின் முதல் பெண் மாலுமி நயோமி அமரசிங்க!

Date:

இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கீகாரத்தை நயோமி அமரசிங்க என்பவர் பெற்றுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

ஊடகவியலாளராக வர ஆசைப்பட்ட அவர், வேலைத் தேடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் ஆட்சேபனைகள் மற்றும் பாலினத் தடைகளைத் தாண்டி மஹாபொல துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அகடமியில் தனது பயிற்சியை நிறைவுசெய்தார்.

இதனையடுத்து கார்னிவல் குரூஸ் லைனில் பணிபுரிந்த அவர்,உலகம் முழுவதும் பயணம் செய்ததுடன், பல நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார்.

ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் பாலினத் தடைகளைத் தகர்த்து, இன்று ஒரு அதிகாரியாக மாறியுள்ளார்.

இந்நிலையில்  captain தர நிலைக்கு உயர்வதே தனது இலக்கு என நயோமி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...