வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்: பொலிஸ் மா அதிபர்

Date:

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதாள உலகக் குழுவினரை ஒடுக்குவதற்கு அவர்களிடமுள்ள துப்பாக்கிகள் பாரிய தடையாக உள்ளமையினால் முப்படையினரின் ஆதரவுடன், அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை கைப்பற்றுமாறும்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் யுக்திய நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் யுக்திய நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...