கிழக்கு ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய பெண் மீட்பு

Date:

காணாமல் போன இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி ஒருவர், 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில்,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், 10 மணித்தியாலத்திற்குள் குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மீட்பு பணியில் பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவற்றை ஈடுபடுமாறு ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் (29) மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனையின் பின், இஸ்ரேல் தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...