சிங்கப்பூர் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர்!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை ஞாயிற்றுக்கிழமை (07) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர்  அலி சப்ரி இந்த விஜயத்தை முன்னெடுக்கிறார்.

இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சிங்கப்பூர் அமைச்சருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.

இதேவேளை, சிங்கப்பூரில் 09ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஆண்டிற்கான ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய-பசிபிக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...