பாதாள உலக குழு மற்றும் போதைப்பொருளும் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் இருந்து ஒழிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் நீதி நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தப் பணியை முன்னெடுப்பதாகவும் கூறியுள்ளார்.