திருமண வைபங்கள் இரண்டு உள்ளங்களை இணைக்கின்ற ஒரு அழகிய சிறப்பான நிகழ்வு. ஆனால் இந்நிகழ்வானது சில சந்தர்ப்பங்களில் எல்லை மீறிய விழாவாகவும் ஆடம்பரமாகவும் செலவுகளைக் கொண்ட நிகழ்வாகவும் இடம்பெறுவதை நாங்கள் அடிக்கடி கேள்விப்படுகின்றோம், ஊடகங்களிலும் பார்க்கின்றோம்.
அண்மையில் இந்தியாவில் நடந்த அம்பானி வீட்டுத் திருமணமும் இதேபோன்ற ஆடம்பர திருமணமாகும். அந்தவகையில் மற்றொரு திருமணம் துருக்கியில் நடந்திருக்கிறது.
ஒரு தொன் நிறையளவுக்கு இறைச்சி வகைகள் சமைக்கப்பட்டு 3கிலோ கிராம் தங்கமும் 4 மில்லியன் லீரா ரொக்கமும் மணப்பெண்ணுக்கு வழங்குகின்ற ஒரு மிகப்பெரிய திருமணமாக நடைபெற்றிருக்கின்றது.
துருக்கியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான முராத் இரெஸ் என்பவருடைய மகனுக்கும் துருக்கியின் பிரபலமான அரசியல் கட்சியின் தலைவருடைய மகளுக்குமே இந்த ஆடம்பரமான திருமணம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இத்திருமணத்திலேயே 4000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
துருக்கில் உள்ள பிரபலமான குடும்பங்களைச் சேர்ந்த தலைவர்கள், அரசில் தலைவர்கள், சமூக பிரமுகர்கள், உயர்மட்ட பிரஜைகள், அரசியல்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழிலதிபர் என்று பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட மிக உயர்ந்த திருமணமாக வர்ணிக்கப்படுகிறது.
உள்நாட்டு பிரமுகர்களுக்கு அப்பால் வெளிநாட்டு பிரமுகர்களும் கூடஇத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். ஈரான், ரஷ்யா, அஜர்பைஜான், ஈராக் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் அதேபோன்று துருக்கியின் துர பிரதேசங்களான அங்காரா, இஸ்தான்புல், மற்றும் இஸ்மிர் போன்ற பகுதிகளிலிருந்தும் இந்த ஆடம்பரமான திருமணத்தில் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவரும் இவ்வாறானதொரு அழகிய பிரம்மாண்டமான திருமணத்தில் கலந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அத்தோடு இத்திருமணத்தில் கதாநாயகர்களாகிய மணமக்களை அவர்கள் மனமார பாராட்டியிருக்கின்றார்கள்.