அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

Date:

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்குரிய அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்

இரண்டு முக்கிய காரணங்களை முன் வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பில் இவர்கள் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1700 ரூபா சம்பளத்தை தர மறுக்கும் களனிவெளி கம்பனித் தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து அடாவடிப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், இத்தகைய அடாவடிப் போக்கை கண்டித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரை கைதுசெய்ய இந்தக் கம்பனி நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்தும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பீட்று தோட்டத்திற்கு கீழ் இயங்கும் பீட்று, லவர்சிலீப், நேஸ்பி, மூன்பிளேன், மாகாஸ்தோட்ட, ஸ்கிராப் ஆகிய தோட்டங்களுடன் ஒலிபண்ட் மற்றும் நுவரெலியா டிவிஷன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் நானுஓயா பிரதேசத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எடின்புரோ, கிளாசோ, ஆடிவன், மற்றும் கிளாஸோ மேல் பிரிவு கீழ்ப்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் மற்றும் உடரதல்ல மேல் மற்றும் கீழ்ப்பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...