தேசபந்து தென்னகோனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிப்பு

Date:

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பதவி வகிக்கமுடியாது என தெரிவித்து உயர் நீதிமன்றம் இன்று காலை இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உத்தரவிடுமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களும், இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 8 பேரினால்  இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நீதியரசர்களான யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்களின் பரிசீலிக்கப்பட்டிருந்தன.

பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதியால் சிபாரிசு செய்யப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்பு சபையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, அவரை நியமித்த ஜனாதிபதியின் முடிவு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...