சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து பில்லியன் கணக்கான சிரிய நாட்டவர் துருக்கியில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
துருக்கியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் சூழ்நிலை காரணமாக அரேபியர்களான சிரிய நாட்டவர் தமது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இது பாரியளவில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலிருந்து இரு சமூகங்களையும் மீட்டு ஒற்றுமையாக வாழ்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும் வகையிலான ஒரு பாடலை துருக்கி பாடகரான மொஹமட் அஸ்லானும், சிரிய பாடகரான யஹியா ஹவ்வா வும் இணைந்து இரு மொழி பாடலை வெளியிட்டுள்ளார்கள்.
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் இப்பாடல் யூடியூபில் பதிவேற்றப்பட்டு சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் மாத்திரம் 24 மணித்தியாலங்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கிலிலும் பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் இந்த பாடலை லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் சூடுபிடித்துள்ள இலங்கையிலும் நமது கலைஞர்கள் இவ்வாறான இன ஐக்கியத்தை வலியுறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாமே.