இஸ்ரேலியப் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமொிக்காவில் போராட்டம்!

Date:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுப்பட்டவர்களில்  200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், அமெரிக்க தலைவர்களுடனும் பேசுவார்த்தையில் ஈடுபடுவதற்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  நேற்று முன்தினம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீனக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான பலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று முன் தினம் தலைநகர் வொஷிங்டனில் யூனியன் கட்டிடத்தின் முன், பலஸ்தீனிய கொடியை ஏந்தியவாறு, ஊர்வலமாக வந்த பொது மக்கள், நெதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள், நெதன்யாகு செய்வது இனப்படுகொலை என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இஸ்ரேல் பிரதமர்  நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, போராட்டக்கார்கள் மீது அமெரிக்க பொலிஸார் கடுமையான அடக்குமுறையை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்கார்கள், அமெரிக்க கொடியையும், பெஞ்சமின் நெதன்யாகுவின் உருவ பொம்மையையும் எரித்ததுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் அமெரிக்க கொடியை எரித்தது நாட்டுப் பற்றின்மையை காட்டுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்  தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 9 மாதங்களாக காசா மீது, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், 39,175 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...