ஆசியக் கிண்ணத்தை வென்ற சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான இன்று (280 இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.
இது தொடர்பாக ரணில் தெரிவிக்கையில், “உங்கள் ஆட்டமிழக்காத ஓட்டம் உங்கள் திறமை அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணிக்கு ஒரு சான்றாகும் அத்தோடு நீங்கள் எங்கள் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.