“உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்”: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரககத்தின் புதிய வேலைத்திட்டம்

Date:

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் தமது பிரச்சினைகளை முன்வைத்து தூதுவருடன் கலந்துரையாடுவதற்கும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

இந்த சந்திப்பு இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமை தினங்களில் மு.ப. 9.30 – பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 15.08.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

இந்த சந்திப்பில் பின்வரும் தொலைபேசி/ வாட்ஸ்அப் (WhatsApp)/ ஐ.எம்.ஓ. (IMO) ஆகிய இலக்கங்களின் ஊடாக கலந்து கொள்ள முடியும்: +966 56 174 4748

Popular

More like this
Related

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...