இஸ்லாமிய கலைக் கலாசார விழுமியங்களை மேன்மைப்படுத்தும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலைக் கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் (கருப்புத்தரவை) ஸாஹிரா பாடசாலை மைதானத்தில் மாலை 5.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும். (பெண்களுக்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மேடையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சிறுவர்களுக்கான இஸ்லாமிய கலைக் கலாசார போட்டிக்கான விண்ணப்ப திகதியும் அறிவிக்கப்படும்.