பங்களாதேஷில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது : நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸை தலைமை தாங்க மாணவர்கள் அழைப்பு

Date:

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததாக பங்களாதேஷ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி வரை காலக்கெடு விதித்திருந்தனர். அதன்படி, இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் மொத்தமாக 350 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 50 தொகுதிகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைப்படி அரசியல் கட்சிகளின் பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஷேக் ஹசீனாவின் அரசியல் போட்டியாளரான முஹம்மது யூனுஸ், மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் ஆகிய கருத்துக்களுக்கு முன்னோடியாக 2006 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

மேலும் இராணுவ ஆட்சியில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...

கண்டி- கொழும்பு பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை,...