காலிதா ஸியாவை முன்னரே விடுவித்திருந்தால் ஷேக் ஹசீனாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது: ஜனாதிபதி

Date:

“ஷேக் ஹசீனா ஒரு படி முன்னதாகவே நடவடிக்கைகளை எடுத்து இருந்தால், இன்று பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) முற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமான “2024 சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை” (ESG) மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நமது நட்பு நாடான பங்களாதேஷின் அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதைப் பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு வெளியேறினாலும், நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது, அவர் நம் நாட்டிற்கு 200 மில்லியன் டாலர்களை வழங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நேரத்தில் உண்மையில் ஒரு நபரைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை கூறுவது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.

இதேவேளை, காலிதா ஸியா, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஷேக் ஹசீனா இதை முன்பே செய்திருந்தால், அவரால் இன்னும்பங்களாதேஷத்தின் பிரதம மந்திரியாக இருந்து இருக்கலாம். உலகின் நிலைமைகள் சரியில்லை என்பதை, இவ்வாறான நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன” என்றார்.

( ஐ.ஏ.காதிர்கான்)

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...