தனிப்பட்ட காரணங்களால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை: தம்மிக்க அறிவிப்பு

Date:

தனிப்பட்ட காரணங்களால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லையென்று தம்மிக்க பெரேரா எம்.பி , பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திய கட்சித் தலைமைக்கும், உங்களுக்கும் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்சவின் பெயரை அறிவிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட பின்வாங்கியுள்ளதால் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...