தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ள பொது வேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்கான பொதுவேட்பாளராக பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வி.தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் இருவருடனும் கலந்துரையாடி யாரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப் போகிறோம் என புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று புதன்கிழமை இதுபற்றி அவரிடம் வினவியபோது, பொது வேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.