STEAM Education பயிற்சி நெறியினை நிறைவு செய்து கொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி இடம் பெற்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த பயிற்சி நெறிக்கு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.
பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களில் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சான்றிதழ் வழங்கி வைத்தார்.