ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் இன்று (13) நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12) 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.