இலங்கை பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு 6 புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், 2 அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஒரு அரச நிறுவனத்தின் தலைவர் ஆகியோரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தோனேசியாவுக்கான இலங்கையின் தூதுவராக எஸ்.ஏ.பி.பி.சேரம், கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கே. ஆஸாத், ரஷ்ய கூட்டமைப்புக்கான தூதுவராக எஸ்.கே குணசேகர, எகிப்துக்கான ஏ.எஸ்.கே.சேனவிரத்ன, ஈரானுக்கு என்.எம். சஹீட் , பஹ்ரைனுக்கு ஒய்.கே. குணசேகர ஆகியோரை உயர் பதவிகளுக்கான குழு அங்கீகரித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பி.கே.பி சந்திரகிர்த்தியும், கைத்தொழில் அமைச்சின் செயலாளராக எஸ்.வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டி.டி.கே பெர்னாட்டை நியமனம் செய்வதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.