பல நாடுகளில் பரவும் குரங்கம்மை: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

Date:

முதல்முறையாக ஸ்வீடன் நாட்டில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் 3 பேருக்கு குரங்கம்மை உறுதியாகியுள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப ஆண்டுகளாகவே உலகில் திடீர் திடீரென புது புது வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. கடைசியாக 2019ல் வெடித்த கொரோனா பெருந்தொற்று உலகை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது.

கொரோனாவில் இருந்து மீண்டுவிட்ட நிலையில், அடுத்து இப்போது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பரவுகிறது.

ஏற்கனவே 2022இல் இது ஆப்பிரிக்காவில் சில நாடுகளுக்குப் பரவியது. இருப்பினும், அப்போது மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே இந்த வைரஸ் பாதிப்பு இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் தான் இப்போது குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்தாண்டு மங்கி பாக்ஸ் தொற்றுக்காக பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தொடர்ச்சியாக 2வது முறையாக பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.

இந்த முறை குரங்கம்மையின் ஆபத்து மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏனென்றால் பொதுவாக ப்பிரிக்கக் கண்டத்திற்குள் மட்டுமே இருக்கும். திடீர் திடீரென அங்கே சில நாடுகளுக்குள் பரவும்.

ஆனால், பிறகு அது கட்டுப்படுத்தப்படும். சில சமயங்கள் மட்டுமே ஆப்பிரிக்காவுக்கு வெளியே வளரும் நாடுகள், ஆசிய நாடுகளில் பரவும். ஆனால், இப்போது முதல்முறையாக ஐரோப்பியாவில் குரங்கம்மை பரவி இருக்கிறது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் இப்போது ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் ஆபத்தான கிளேட் I வகை மங்கி பாக்ஸ் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்குச் சோதனை செய்யும் முயற்சியிலும் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

ஸ்வீடனுக்கு பிறகு இப்போது நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் 3 பேருக்கு குரங்கம்மை  பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவருமே ஐக்கிய அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாக குரங்கம்மை லேசானது பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் சில சமயங்கள் மட்டும் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும்.

இந்த குரங்கம்மை பாதிப்பு ஏற்படும் போது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். குறிப்பாகத் தோலில் சீழ் புண்களும் ஏற்படும். இது பொதுவாகவே உடலுறவு மூலமாகவே பரவும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...