தபால் மூல வாக்களிப்பிற்கு 7 இலட்ச அரச சேவையாளர்கள் தகுதி!

Date:

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு செப்டெம்பர் 4ஆம் திகதி, அஞ்சல் மூல வாக்களிப்பை செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த 3 தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நாள் கடந்த 09 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை  ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...