மும்பையில்(mumbai) இருந்து இன்று (22) காலை வந்த ஏர் இந்தியா(air india) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
காலை 8 மணியளவில் 135 பயணிகளுடன் விமானம் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 8.44 மணியளவில் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் காலை 7.30 மணியளவில் விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, காலை 7.36 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. “இந்த சம்பவத்தால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விமான நிலைய செயற்பாடுகள் தற்போது தடையின்றி உள்ளன,” என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.