திடீரென உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர்: வேட்பாளர் பெயர் பட்டியல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Date:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

​​எனவே 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான மொஹமட் இல்யாஸின் நேற்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக அவரின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறுமா என கேள்வியெழுந்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மாற்று நபரை முன்வைக்க பிரதிநிதிகள் விண்ணப்பித்தால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட காமினி திஸாநாயக்க குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவருக்குப் பதிலாக அவரது மனைவி ஸ்ரீமா திஸாநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...