இலங்கையில் குரங்கம்மை நோயை கண்டறிய விசேட திட்டம்!

Date:

இலங்கையில் குரங்கம்மை நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு நோயாளிகள் பதிவானால் அவர்களுக்கு கொழும்பு தொற்று நோய் ஆய்வுப் பிரிவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்றுக்குள்ளானவரின் காயத்தை தொடுவதன் மூலமோ நீண்ட காலமாக நோய்த் தொற்றாளர் சுவாசிக்கும் காற்றை சுவாசிக்க நேரிட்டாலோ இந்த நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த நோய்த் தொற்று வேகமாக பரவக்கூடிய அபாயம் கிடையாது எனவும், தொற்று நோயாளியின் படுக்கை விரிப்பு மற்றும் ஆடைகள் ஊடாகவே இந்த நோய்த் தொற்று பரவக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குரங்கம்மை பாதித்த நோயாளிகளிடம் காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் உள்ளிட்ட நோய் அறிகுறிகளை காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...