ஜனாதிபதி தேர்தல் : ஆயிரத்தைக் கடந்த முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தலுடன்  தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (25) வரை 1,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 4 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறிய 1006 குற்றச்சாட்டுகளும், 42 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினத்தில் மாத்திரம் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை குறித்து 105 முறைப்பாடுகளும், 19 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...