ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அங்கத்தவர்களை இன்று (27) அதன் தலைமையகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது இடம்பெற்ற மேலதிக தகவல்கள் தொடர்பில் இன்னும் வெளியிடப்படவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் அங்கத்தவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அந்த வரிசையில் இன்றைய தினம் ரணில விக்கிரமசிங்கவும் ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.