கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு: இன்று முதல் நடைமுறையாகும் திட்டம்

Date:

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன்படி இன்று முதல் வருகையின் வரிசைக்கு அமைய கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து விலை மனு பெறப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ள மக்கள் கடந்த சில நாட்களாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

உணவு, மலசலக்கூடம் உள்ளிட்ட வசதிகளின்றி நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருப்பதாக  மக்கள் தெரிவித்திருந்தனர்.

‘பாஸ்போர்ட் பெற மூன்று நாட்கள் வரை ஆகின்றது. டோக்கன் கொடுப்பதாக கூறுகின்றனர் எப்படி என்று தெரியவில்லை. எத்தனை நாட்கள்…? பணமும் முடிந்து விட்டது., இறுதியில் ஒருநாள் சேவை என கூறி 20 ஆயிரம் கேட்கிறார்கள் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...