இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் ‘சொபாதனவி’ திறந்து வைப்பு

Date:

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியாளராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலதிகமான வலுசக்திக்கான கேள்வி எப்போதும் இருக்கும் என்பதோடு, உத்தேச இந்தியா – சிங்கப்பூர் மின் இணைப்பு நடைமுறைக்கு வந்தால், அதில் இணைந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமான கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டத்தை இன்று (28) காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக நாட்டின் மின்சார விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் முக்கியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமான ‘லக்தனவி’ நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட “சொபாதனவி” மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 350 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுத்தரும்.

முதல் கட்டமாக, 220 மெகாவாட் வலுவை கொண்ட F-Class gas turbines இயக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதனால் நாட்டின் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சார உற்பத்தி மூலத்துக்கு தேவையான பங்களிப்பு வழங்கப்படும். இரண்டாம் கட்டம், 2025 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் நிறைவு செய்யப்படவுள்ளது. நீராவி சுழற்சி விசையாழி ஒன்றை நிறுவுவதன் மூலம் உற்பத்தி நிலையத்திலிருந்து மேலும் 130 மெகாவோட் மின் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடியும்.
‘சொபாதனவி’ மின் உற்பத்தி நிலையம் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெரும் பங்களிப்புச் செய்யும். அதன்படி, இந்த மின் உற்பத்தி நிலையம் நாட்டு மக்களுக்கு நிலையான மற்றும் குறைந்த விலையில் வலுசக்தி விநியோகத்தை வழங்குவதோடு, தொழிற்சாலை வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் உதவும்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...