‘The ABCs of AI: Shaping Your Future’ என்ற தொனிப்பொருளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஒரு அறிமுக நிகழ்ச்சி பேருவளையில் நடைபெற்றது.
பேருவளை வலய ராபிததுந் நளீமீய்யீன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சி 24 ஆம் திகதி பேருவளை விஸ்டம் கெம்பஸில் இடம்பெற்றது.
காலை 9.30 முதல் நண்பகல் 12.30 வரை நடைபெற்ற மேற்படி நிகழ்வில் 24 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
வளவாளராக SLBC முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான அஷ்ஷெய்க் இஸ்பஹான் சாப்தீன் கலந்து கொண்டார்.
சிறப்பான முறையில் அமையப் பெற்ற மேற்படி நிகழ்வில் AI பற்றிய அறிமுகம் உட்பட அதன் கையாளுகை முறைமைகளும் நடைமுறை ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணிக்கக் கல் வியாபாரிகள் என கலந்து கொண்டதோடு, விஸ்டம் கெம்பஸ் உரிமையாளர் அஷ்ஷெய்க் பவ்ஸர், நிகழ்வை ஏற்பாடு செய்த அஷ்ஷெய்க் இஸ்பஹான் பாகிர் உட்பட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.