கடந்த வெள்ளியன்று 80 வயது மதிக்கத்தக்க செவிப்புலனற்ற பலஸ்தீனிய முதியவர் ஒருவர் பாதையில் நடந்துசெல்கின்ற போது அவருக்கு சொல்லப்பட்ட தகவல்கள் எதுவும் காதுகளுக்கு கேட்காத நிலையில் அவரை அந்த இடத்திலேயே இஸ்ரேல் இராணுவம் சுட்டுக்கொன்றது மத்திரமில்லாமல் அவருடை உடலை எந்த கண்ணியமுமின்றி இஸ்ரேல் இராணுவ வாகனத்தின் சக்கரங்களுக்கு கீழால் நசுக்குகின்ற காட்சி தற்போது சமூக ஊடகங்களில் ரைலாகி வருகின்றன.
குறித்த பகுதியில் இன்டர்நெட் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலை காரணமாக 3 தினங்களுக்குள் கொலை செய்யப்பட்ட இந்த முதியவரின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதால் இவரின் உடலை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் அந்த இடத்துக்கு மீட்பு வாகனங்கள் செல்ல முடியாதளவுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால் 3 நாட்கள் அவரது உடல் அங்கேயே இருந்திருக்கிறது.
இஸ்ரேலிய இராணு வாகன சக்கரங்களின் கீழால் நசுக்கப்படும் இந்த காட்சி சமூக ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு தற்போது அது பேசுபொருளாக உள்ளது.
மனிதாபிமான மற்ற முறையில் இவ்வாறான காட்டுமிராண்டிதனமான செயல்கள் ஒரு வருட காலமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.