கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், கர்ப்பிணித் தாய்மார்களில் இரும்புச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக, கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கின்றது.
மேலும், நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்களவு எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையை மையமாகக் கொண்டு, குறைந்த எடையுள்ள குழந்தைகள் மற்றும் கருச்சிதைவை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் தேவைமிக்கது என அவர் எச்சரிக்கையுடன் கூறுகிறார்.