ஜனாதிபதி வேட்பாளர் செலவிடக்கூடிய தொகை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

Date:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர்  வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக நீதிமன்றில் கண்டறியப்பட்டால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்றும் வேட்பாளரின் சிவில் உரிமைகள் பறிக்கப்படும் மூன்று ஆண்டுகள் பறிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் (01) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வர்த்தமானி இலக்கம் 03 ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் 31 நாட்களுக்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அதனை வழங்காமை மற்றும் தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பதவி மற்றும் குடியுரிமைகள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் இது சட்டமாகிவிட்டதால், தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு விவரங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆணைக்குழு வழங்கும் செலவுகள் குறித்த விவரங்கள் நாளிதழ் விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, செலவின விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல்களாகவோ இருந்தால், எந்நேரத்திலும் அதற்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்து நீதிமன்றில் நடவடிக்கை எடுக்க சட்டத்தின் மூலம் மக்களுக்கு அனுமதியுள்ளதாக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...