கொழும்பிலிருந்து குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டுக்கு கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகரில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், எதிர்வரும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ குத்பாக்களை ‘சுற்றுச் சூழலை பாதுகாப்போம் மற்றும் ‘அறுவக்காடு குப்பைத் திட்டத்தால் ஏற்படும் சூழல் அச்சுறுத்தல்’ என்ற தலைப்புகளில் ஜூம்ஆ உரை நடாத்துமாறு உலமாக்களிடத்திலும் (கதீப்மார்கள்) மற்றும் ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கவனத்தில் கொண்டு கிளீன் புத்தளம், சர்வமதக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் ஒன்றிணைந்து அறுவக்காடு குப்பைத் திட்டத்தை நிறுத்துவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.