உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பின் செய்தியை கொண்டு செல்லும் மீலாதுன் நபி

Date:

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இந்த மீலாதுன் நபி தினமானது உலகினை நேர்வழிப்படுத்த உதவிய நபிகளாரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு உன்னத தருணமாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் சம உரிமை மற்றும் சமத்துவத்தினை வலியுறுத்தும் உன்னதமான கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு நபரும் இனம், சாதி அல்லது நிறம் காரணமாக ஒருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர்.

வெறுப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த யுகத்தில் மனித விழுமியங்களுக்கும் மனிதநேயத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பங்களிப்பு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களைச் சுரண்டுவதை எதிர்த்ததுடன், அடிமைகளின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார்கள். தொழிலாளர்களின் வியர்வை உலர்வதற்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்று போதித்தது இதற்கு உதாரணம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இத்தினத்தில், உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பின் செய்தியை கொண்டு செல்லும் மீலாதுன் நபியின் மகத்துவம் அன்றாட வாழ்வில் நம் அனைவரையும் வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...