தேர்தல் கடமைக்கு களமிறக்கப்படும் பொலிஸார்

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் விசேட கடமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக 60,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்காக 54,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6,0000 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக விசேட அதிரடிப்படை சிப்பாய்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே வவுனியாவில் தேர்தல் கடமைகளுக்காக 1500 காவல்துறையினர் களமிறக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...