நேற்று முன்தினம் காலமான பிரபல இஸ்லாமிய அறிஞர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கலாநிதி உமர் பின் சவூத் அல் ஈத் அவர்களுடைய ஜனாசா நேற்று பிற்பகல் சவூதி தலைநகர் ரியாதில் உள்ள அல் ராஜிஹ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய உலகில் மிகவும் பிரபல்யம் பெற்றவரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான மறைந்த கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது.
காத்தான்குடி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டது.