நாமலின் மனைவி டுபாய் பயணம்: முக்கிய அரசியல் பிரமுகர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் தந்தை இன்று (22) டுபாய் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால்  டுபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளதாக  விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன் அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியாவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கும் சென்றுள்ளனர்.

இத்தேகந்தவின் சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...