இலட்சிய கனவுகளை நோக்கி பயணிக்கும் சவூதி அரேபியா, 94வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது!

Date:

எழுத்துகாலித் ரிஸ்வான்

இலட்சியம் மற்றும் முன்னேற்றத்திற்கான மத்திய கிழக்கின் கலங்கரை விளக்கமான சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை வருடந்தோறும் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இவ்வருடம் சவூதி அரேபியா 94வது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.

“நாங்கள் கனவு காண்கிறோம், அதனை அடைந்து கொள்கிறோம் | We Dream, We Achieve” என்ற கருப்பொருள் தாங்கி கொண்டாடப்படவுள்ள இத் தேசிய தினமானது, சவூதியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இரண்டரக்கலந்த நவீன தொலைநோக்குடனான கனவுகளையும், அந்த கனவுகள் மூலம் கடந்த காலங்களில் கைகூடிய சாதனைகளையும் பரைசாற்றும் விதமாகவே அமைந்துள்ளது.

தொலைநோக்குடன் கூடிய இராச்சியம்

1932 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களால் அமைக்கப்பட்ட சவூதி அரேபியாவிற்கான அடித்தளம், பல்வேறு நிலங்களை ஒன்றிணைப்பதையும் தாண்டி, பாலைவன பூமியை ஒரு செழிப்பான தேசமாக மாற்றியமைக்கின்ற ஒரு கனவை நனவாக்கியுள்ளது.

அன்று தொட்டு இன்று வரை சவூதி அரேபியா தொடர்ந்தும் இலட்சிய கனவுகளை நோக்கி பயணிக்க கூடிய ஒரு இராச்சியமாகவே இருந்து வருகிறது.

இன்று, மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமையில், சவூதி அரேபியா ஒரு புது வடிவில் உருவெடுத்து சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய இடம் வகிக்கக் கூடிய நாடாக மாறியிருக்கிறது. சவூதியின் விஷன் 2030 திட்டமானது இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தமை மறுக்க முடியாத உண்மை.

விஷன் 2030 திட்டமானது, பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துதல், எண்ணெய்ப் பொருளாதாரத்தில் சாரந்திருப்பதை குறைத்தல் மற்றும் சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட திட்டமாகும்.

சாதனைகளுக்கான நாடு

மேற்குறிப்பிட்ட சில துறைகளைத் தாண்டி இன்னும் பல்வேறு துறைகளில் சவூதி அரேபியா முன்னேற்றகளையும் மாற்றங்களையும் கண்டிருக்கிறது. அந்த வகையில் மிகவும் முக்கியமாக பெண்களுக்கான வாய்ப்புகளை கடந்த காலந்துடன் ஒப்பிடும் போது அதிகப்படுத்தியுள்ளது, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்துடன் கூடிய தலைமைப் பொருப்புகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில சட்டங்களில் நெகிழ்வுத் தன்மை சீர்திருத்தங்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு விஷன் 2030 திட்டத்தின் பரந்த இலக்குகளுடன் இணைந்து பெண்களின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

சவூதியின் பசுமை முன்முயற்சித் திட்டமானது மற்றொரு லட்சிய திட்டமாகும், இது நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதை நோக்காக கொண்டது.

காபன் உமிழ்வைக் குறைப்பதற்கும், பசுமையை அதிகரிப்பதற்குமான சவூதியின் இந்த திட்டம் உலகளாவிய சுற்றுச் சூழல் சார் சவால்களை அணுகுவதற்கான முற்போக்கான யோசனையை குறித்துக் காட்டுகிறது.

மேலும், சவூதி அரேபியா உலகளாவிய பொருளாதார துறையின் குறிப்பிடத்தக்க சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பது பொருளாதாரத்துறை சாரந்த எவரும் அறிந்த உண்மையாகும்.

$500 பில்லியன் செலவில் அமையும் மாபெறும் நகர திட்டமான NEOM திட்டமானது, புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் உலகில் முன்னணி வகிக்க வேண்டும் என்ற சவூதியின் இலட்சியத்தின் சின்னமாகும்.

இந்த அதி நவீன நகரமானது, அறிவு, படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவுக்கான மையத்தை உருவாக்குவதற்கான சவூதியின் லட்சியத்தை பிரதிபலிக்கிறது.

கலாச்சார மறுமலர்ச்சி

சவூதி அரேபியாவின் வளமான பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில் அந்நாட்டின் கலாச்சாரத் துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

First Saudi State மற்றும் Diriyah Gate போன்ற வரலாற்று ரீதியான திட்டங்கள் மற்றும் முயற்சிகள் நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தை காட்டுகின்றன, அதே சமயம் ரியாத் சீசன் மற்றும் ஜித்தா சீசன் போன்ற நிகழ்வுகள் சவூதியை உலகளாவிய கலாச்சார மற்றும் பொழுதுபோக்குத் தளமாக மாற்றியுள்ளன.

கடந்த காலத்தில் சவூதி அரசால் தடைசெய்யப்பட்டிருந்த திரைத் துறை இப்போது செழித்து வருகிறது, சவூதி திரைப்பட தயாரிப்பாளர்கள் சர்வதேச தளங்களில் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

இந்த கலாச்சார மறுமலர்ச்சி பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், உலக அரங்கில் சவூதி அரேபியாவின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது.

மனிதாபிமான உதவிகளுக்கான முன்னோடி

உள்நாட்டுக்குள் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகவும் சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகள் பரவலாக பாராட்டுக்குட்பட்டு வருகின்றன. நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் உலகின் தலைசிறந்த நன்கொடையாளர்களில் சவூதி தொடர்ந்தும் இடம்பிடித்து வருகிறது. உலகளாவிய மனிதாபிமான விடயங்களில் அதன் பங்களிப்புகள் சவூதி கலாச்சாரத்தில் ஆழமாக பதிக்கப்பட்ட கருணை மற்றும் பெருந்தன்மைக்கு ஆதாரமாக உள்ளன.

ஒன்றுபட்ட உறுதியான தேசம்

சவூதியின் 94வது தேசிய தினமானது சவூதி மக்களின் ஒற்றுமை, வலிமை மற்றும் முன்னேற்றத்தின் கொண்டாட்டமாகும். “நாங்கள் கனவு காண்கிறோம், அதனை அடைந்து கொள்கிறோம்” என்ற கருப்பொருள் ஒரு மகுட வாசகம் மட்டுமல்ல மாறாக இது ராஜ்யத்தை முன்னோக்கி செலுத்தும் ஒரு சக்தியின் பிரதிபலிப்பாகும்.

பொருளாதார மைல்கற்கள் முதல் சமூக சீர்திருத்தங்கள் வரை ஒவ்வொரு சாதனையும் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் மூலம் நனவாகிய கனவுகளுக்கு சான்று பகர்கின்றவையே

சவூதி அரேபியாவின் எதிர்காலத்தை நோக்கிய பார்வை நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கிறது. அதன் கனவுகள் தைரியத்தாலும் முயற்சியாலும் நனவாக்கப்பட்டவையாக உள்ளன.

இந்த தேசிய தினத்தில், சவூதி அரேபியா தனது கடந்த காலத்தை மட்டுமல்ல, வரம்பற்ற எதிர்கால அடைவுகளுக்காற சாத்தியக்கூறுகளையும் கொண்டாடுகிறது.

கனவு காண்பதில் இருந்து அதனை அடைவதற்கான பயணம் தொடர்ச்சியானது, அந்தப்பயணமானது தொலை நோக்கி உறுதி மற்றும் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்தப் படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...