முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
இதன்படி கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசிய அமைப்பாளர் பதவியை திலித் ஜயவீரவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தார்.
எவ்வாறாயினும், நேற்று (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திலும் திலும் அமுனுகம கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.