சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு – காஷ்மீர் சட்டசபைக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தேர்தல் நடந்தது.
இதில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட்டது. இக்கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே, தேசிய மாநாடு அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஜம்மு பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜகமுன்னிலையில் இருந்தது.
இறுதி நிலவரப்படி, தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணி காஷ்மீரில் புதிய அரசை அமைக்க உள்ளது.