அனுரவிற்கு பெரும்பான்மை கிடைப்பதற்காக எனது கட்சி தேர்தலில் போட்டியிடாது: விமல் வீரவன்ச

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தை உடைய அரசியல் இயக்கம் என்பதாலும் ஜேவிபியின் வரலாற்று பாரம்பரியத்தை மதிக்கும் அதற்கு உரித்தான கட்சி என்பதாலும் நாங்கள் ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த மக்கள் ஆணையை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் என விமல்வீரவன்ச அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பாகிடைப்பதற்காக ன்மை தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவின்றி அனுரகுமாரதிசநாயக்க ஆட்சி புரியும் நிலையை ஏற்படுத்து தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கூட்டணியாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடபோவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...