சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்

Date:

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப் பிரிவை உடனடியாக நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழாம் திகதி கொழும்பு சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் தாமரைக் கோபுரத்திலிருந்து தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம் ஒன்று இல்லாத காரணத்தினால் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்களின் கல்வித் தகுதி, கற்பித்தல் முறை, குழந்தைகளின் ஒழுக்கம், கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகள், பாடத்திட்டம் உள்ளடக்காதது போன்ற பல பிரச்சினைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சுக்கு அவ்வப்போது முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரணை செய்வதற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லாததால், சம்பந்தப்பட்ட பாடசாலையிடம் மட்டுமே அமைச்சகம் விசாரணை செய்ய முடியும்.

மேலும் தாமரை கோபுரத்தில் இருந்து தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் இன்று (10) அறிக்கை சமர்ப்பிக்குமாறு சர்வதேச பாடசாலைக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்ட குழு உள்ளிட்ட அதிகாரிகள் குழு இன்று பாடசாலைக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...