சீரற்ற வானிலை: மண்சரிவு தொடர்பில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

அத்தனகல்ல தொகுதியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்கின்ற மழை காரணமாக அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தசாப்த காலமாகவே மழை பெய்கின்ற போது இப்பகுதி தொடராக வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

இதேவேளை பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று  (12) மாலை 04:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதிர தெரிவித்தார்.

இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழும், 1ஆம் கட்டத்தின் கீழும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம் – சீதாவக, ⁠படுக்கை,  களுத்துறை மாவட்டம்- வலல்லாவிட்ட, ஹொரண, ⁠இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை.

கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு – அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...