‘புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் தொடர்பில் திருப்தியடைய முடியாது’

Date:

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினையின் அடிப்படையில் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால் திருப்தி அடைய முடியாது என்றும் பரீட்சை முறைகேடு செய்பவர்களுக்கு ஒரே தண்டனை தேர்வுக்கு தடை விதிப்பதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தண்டனைகளை நிர்ணயிக்கும் அதிகாரங்களை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ள போதிலும், சில குற்றச்சாட்டுகளுக்கு தண்டனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் நம்பகத்தன்மையுடன் பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாவிட்டால் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடு என்ன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இங்கு வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...