களுத்துறையிலிருந்து மருதானைக்கு செல்லும் புகையிரதத்தில், திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. புகையிரதம் புறப்பட தயாராக இருந்தபோது, இயந்திரம் உள்ள பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால், கடலோரப் பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள அரசு மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.