சகவாழ்வை பலப்படுத்தும் பணியில் மொழிப் பிரச்சினை, தவறான கருத்துக்கள் உள்ளிட்ட 15 பிரச்சினைகளை இனங்கண்ட புத்தளம் சர்வமதக் குழுவின் ஒரு நாள் செயலமர்வு

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு புத்தளம் பாலாவி “வடப்” மண்டபத்தில் நேற்று (15) இடம்பெற்றது.

இச் செயலமர்வில் வளவாளராக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உத்தியோகத்தர் திருமதி ஜஷானியா ஜயரத்ன கலந்து கொண்டார்.

புத்தளம் மாவட்டத்தில் சகவாழ்வை நிலைநாட்டுவதில் ஏற்படும் பிரச்சினைகளை இனங்காணுவதற்கான விசேட நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச் செயலமர்வின் மூலம் மாவட்டத்தின் அமைதிக்கு இடையூறாக உள்ள 15 விஷயங்கள் கண்டறியப்பட்டன.

இவற்றில் மொழிப் பிரச்சினை மற்றும் தவறான கருத்துக்கள் என்பன முதன்மைப் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டமை விசேட அம்சமாகும்.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாதர் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிகள் உட்பட புத்தியாகம ரதன தேரர், சுந்தரராம குருக்கள், அருட்தந்தை யொஹான் ஜெயராஜ், அஷ்ஷைக். அப்துல் முஜீப் ஆகிய சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்ட இச் செயலமர்வை மாவட்ட சர்வமத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. முஸ்னியா நெறிப்படுத்தினார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...