ஒரு கட்சி, வேட்பாளர், சுயேச்சைக்குழு செலவிடும் உச்ச தொகை அறிவிப்பு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு, கட்சியொன்று அல்லது வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் செலவிடக் கூடிய தொகையை நிர்ணயித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, ஆகக் கூடுதலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும் கொழும்பு (21 பேர்), கம்பஹா (22 பேர்) மாவட்டங்களில் ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு செலவிடக் கூடிய உச்சபட்ச தொகை கொழும்பு மாவட்டத்தில் ரூ. 7 கோடியே 94 இலட்சத்து 93 ஆயிரத்து 756
(ரூ. 79,493,756) எனவும் கம்பஹா மாவட்டத்தில் ரூ. 8 கோடியே 17 இலட்சத்து 35 ஆயிரத்து 55 (ரூ. 81,735,055) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் முறையே ரூ. 114, ரூ. 110 தொகையை செலவிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக் குறைந்த தொகையாக வன்னி மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் ரூ. 82 இனை செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சமாக முறையே ரூ. 57 இலட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ. 56 இலட்சத்து 43 ஆயிரத்த செலவிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவர் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் முறையே ரூ. 34,698, ரூ. 35,677 தொகையை உச்சபட்சம் செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...